Polimer News
புதிய திரைப்படங்கள் தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி - முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள்
தமிழக திரையரங்குகளில் காலை 6 மணி முதல் புதிய படங்களுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதி அளித்த தமிழக முதல் அமைச்சர் விஜய்க்கு , தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார். இதன் மூலம் திரையரங்கு கிடைக்காமல் இருகின்ற சிறு படங்களுக்கும் திரையிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்த சுப்பிரமணியம், ஜெயிலர் -2 படம் மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில், தீபாவளி கடந்தும் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடும் என்று தெரிவித்தார்