உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

TNPSC group 4 exam last date: குரூப் 4 விண்ணப்பிக்க கடைசி தேதி; மொத்தம் 10 லட்சத்தை எட்டிய தேர்வர்கள் எண்ணிக்கை

TNPSC Group 4 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக் கிழமை (நவ. 5) முடிய உள்ள நிலையில், இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பணிகளில் சேர விரும்பும் இளைஞர்கள் மத்தியில் குரூப்-4 தேர்வு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்வுக்கு வழக்கம்போல 10, 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமல்லாமல், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படித்தவர்களும் கூட ஆர்வம் காட்டுகின்றனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தேர்வர்கள் எண்ணிக்கை 9.80 லட்சத்தைக் கடந்துள்ளது. ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்…