Indian Express Tamil
இந்தியாவில் ஏ.ஐ வேலைகளைப் பறிக்காது; ஆனால் ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு ஆபத்து அதிகம்: சென்னை ஐ.ஐ.டி
சென்னையிலுள்ள முதல் நிலை பி.பி.ஓ (BPO) நிறுவனப் பணியாளர் ஒருவரிடம், "செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உங்களது வேலையைப் பறித்துவிடுமா?" என்று கேட்டால், அதற்கான உண்மையான பதில்: "வேலையின் எந்தப் பகுதியை?" என்பதாகத்தான் இருக்கும். கடவுச்சொல் (Password) மாற்றங்கள், கணக்கு இருப்புச் சரிபார்ப்பு அல்லது மருத்துவரிடம் முன்பதிவு செய்தல் போன்ற பொதுவான விஷயங்களை இப்போது 'வாய்ஸ் பாட்'களே (Voice Bots) கையாண்டு விடுகின்றன. இருப்பினும், ஒரே நேரத்தில் மூன்று சிக்கல்களுடன், கோபத்துடன் அழைக்கும் வாடிக்கையாளரை இன்னமும் அந்த மனிதப் பணியாளர்தான் கையாள்கிறார். ஆங்கிலத்தில் படிக்க: அவரது பணி முற்றிலுமாக மறைந்துவிடவில்லை; அதே…