IBC Tamil
எரிபொருள் விலையில் நடக்கும் மறைமுகக் கொள்ளை: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் போது ஒரு லீட்டருக்கு 100 முதல் 120 ரூபாய் வரை அதிகப்படியான இலாப வரம்பைக் கொண்டு நுகர்வோரைச் சுரண்டி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் இயங்கும் ஏனைய 3 தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கும் சமமான சந்தை வாய்ப்பை வழங்காமல் சிபெட்கோ தடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ...