Indian Express Tamil
TNPSC group 4 exam: டி.என்.பி.எஸ்.சி மீது நம்பிக்கை குறைகிறதா? 4 ஆண்டுகளில் விண்ணப்பதாரர் எண்ணிக்கை 56% குறைவு: அண்ணாமலை அதிர்ச்சி புள்ளி விவரம்
தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவரும், வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மீதே இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. குரூப்-4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும், இந்த ஆண்டு, இன்று வரையிலும், வெறும் 9.80 லட்சமாகவும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரிந்…