Nakkheeran
அமித்ஷாவுடன் சிரஞ்சீவி - ராம் சரண் சந்திப்பு; முக்கிய பிரச்சனை குறித்து புகார்!
சமீப காலமாக ஏஐ மற்றும் டீஃப் ஃபேக் தொழில் நுட்பம் மூலம் திரை மற்றும் சமூக பிரபலங்களின் போலி வீடியோக்கள் அதிகமாகி வருகின்றனர். குறிப்பாக நடிகைகளை ஆபாசமாக சித்தரித்தல் வணிக நோக்கத்திற்காக புகைப்படங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட திரை பிரபலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சட்ட ரீதியாக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு முன்னனி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பி…