Polimer News
சிறைக் கைதிகளால் நடத்தப்பட்டு வந்த பெட்ரோல் பங்க் மீண்டும் திறப்பு
சேலம் மத்திய சிறை வளாகம் அருகே மூடப்பட்ட பெட்ரோல் பங்க் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சேலம் சிறை நிர்வாகம் நடத்தி வந்த இந்த பெட்ரோல் பங்க்கும் கோழிக் கடையும், தேனியில் சிறைக் கைதிகள் தப்பி ஓடியதன் தொடர்ச்சியாக மூடப்பட்டன. பங்க்கில் இருப்பில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசலை நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியாது என்பதால், தனியார் டீலர் ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் இருப்பு தீர்ந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இருப்பினும் இந்த பங்க்கில் இனி கைதிகள் வேலை செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.