உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Grandma Kitchen Cleaning: எவ்வளவு கழுவினாலும் நீங்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திர வெள்ளைக் கறைகள்! பாதி எலுமிச்சை வைத்து நீக்குவது எப்படி?

நம் வீட்டு சமையலறையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், பாத்திரங்களைக் கழுவிய பிறகும் சில நேரங்களில் அவற்றின் மேற்பரப்பில் வெள்ளை நிறத் திட்டுகள் மற்றும் வட்ட வடிவக் கறைகள் படிந்திருப்பதைப் பார்க்கலாம். குறிப்பாக, பாத்திரங்களில் தண்ணீர் பட்ட இடங்களில் இந்தக் கறைகள் தெளிவாகத் தெரியும். எவ்வளவுதான் சோப்பு போட்டுக் கழுவினாலும் சில நேரங்களில் இவை எளிதில் நீங்காது. இதற்குப் பின்னால் தண்ணீரில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருக்கலாம். இத்தகைய தாதுக்கள் அதிகம் கலந்த தண்ணீரை Hard Water (கடின நீர்) என்று அழைக்கிறோம்.​ இதுபோன்ற லேசான தண்ணீர் கறைகளை அகற்ற ந…