Indian Express Tamil
கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்திற்கு மனித தவறே காரணம்; 9 சிறைக் காவலர்களை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி சந்தீப் ராய் உத்தரவு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில், சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தில், சிறைக் காவலர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் ஒரே அறையில் விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். திங்கள் கிழமை (அக்டோபர் 26) இரவு 10.30 மணியளவில், கைதி ஒருவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சத்தமிட்டுள்ளனர். இதைக் கேட்டு சிறைக் காவ…