உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அமெரிக்க இடைக்கால தேர்தல் - ஜொலிக்கும் இந்திய முகங்கள்

காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையான கீழவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பியா டாண்டியா பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஜனநாயகக் கட்சி சார்பில் ஃபுளோரிடாவின் 22வது மாவட்டத்தில் போட்டியிட்டு 51.9 சதவீத வாக்குகளைப் பெற்று வாகை சூடினார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக இருந்த மற்றொரு இந்திய வம்சாவளியான சுகாஷ் சுப்ரமணியம் விர்ஜீனியாவில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். மற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்களான பிரமிளா ஜெயபால் வாஷிங்டன்னின் 7வது மாவட்டத்திலும், ரோ கன்னா Ro Khanna கலிஃபோர்னியாவின் 17ஆ…