உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘தி ஒன்’ பட்டம் எதற்காக? - சூர்யா விளக்கம்

சமீபகாலமாக சூர்யாவை ‘தி ஒன்’(The One) என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறது. ரெட்ரோ படத்திற்கு பிறகு இந்த பட்டம் அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டம் குறித்து அண்மையில் அவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் ‘சீன்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். அதாவது ரசிகர்களிடம் தி ஒன் பட்டம் வேண்டுமா எனக் கேட்டார். அதற்கு ரசிகர்கள் ஆர்பரித்ததுடன் சிரித்துக் கொண்டே கடந்து சென்று விட்டார். இந்த நிலையில் அது குறித்து விரிவாக தற்போது பேசியுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த சீன் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “தி ஒன் என்பது நான் மட்டும் கிடையாது. அனைவரும் சேர்ந்தத…