Hindu Tamil Thisai
நூலகத்தில் தரிசித்த தாய்! | என் மன வானில்
பள்ளி காலாண்டு விடுமுறையின் போது ஒரு சனிக்கிழமை காலை தேவகோட்டையில் உள்ள கிளை நூலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு தாய் நின்றுகொண்டிருந்தார். தன் மகனையும் மகளையும் நூலகத்தில் உறுப்பினர் ஆக்குவதற்காக நூலகரிடம் இரண்டு உறுப்பினர் படிவங்களை வாங்கினார். மகனிடம் கொடுத்து விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு கூறினார். மகனோ தயங்கினார். இதைக் கவனித்த தாய், "என்னடா, நிரப்பாம வச்சுக்கிட்டு இருக்க? நிரப்பு டா" என்றார். மகன், "தமிழ்ல இருக்குதும்மா…