உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விளம்பரங்களால் எரிச்சலா? கூகுளை கழட்டிவிட்டு சாட் ஜிபிடிக்கு தாவும் மக்கள்: வெறும் 2 மாதத்தில் 20 கோடி பயனர்கள்

ஏதோ ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், உடனடியாக நம் நினைவுக்கு வருவது 'கூகுள்'தான். கடந்த பல ஆண்டுகளாக இன்டர்நெட் தேடலில் அசைக்க முடியாத ராஜாவாக இருந்துவரும் கூகுளுக்கு, இப்போது அடி விழத் தொடங்கியுள்ளது. கூகுளை ஓரம் கட்டிவிட்டு, மக்கள் இப்போது 'சாட்ஜிபிடி' (ChatGPT) பக்கம் வேகமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. எந்தவொரு விஷயத்தைத் தேடினாலும் கூகுளில் பல பக்கங்கள் வந்து விழும். அதில் தேவையில்லாத விளம்பரங்களும், எஸ்.இ.ஓ (SEO) முறைகளைக் காட்டி திசைதிருப்பும் வலைதள இணைப்புகளுமே அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன. நமக்குத் தேவையான துல்லியமான பதில் கிடைக்க, பல ல…