Nakkheeran
சிதம்பரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை நியமிக்கக் கோரிக்கை!
கடலூர் மாவட்டத்தில் முக்கிய நகராட்சியாக விளங்கும் சிதம்பரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை விரைந்து நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் நகராட்சி எல்லைக்குள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளதால் ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலமாகவும், அருகிலுள்ள அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதாலும் சிதம்பரம் நகருக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வெளியூர்களில் இர…