Indian Express Tamil
முன்பதிவு வேண்டாம்; தீபாவளி ஸ்பெஷலாக 5 மெமு ரயில்கள் அறிவிப்பு: சொந்த ஊர் கிளம்பும் பல ஆயிரம் பயணிகளுக்கு நற் செய்தி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னை, தாம்பரம், மானாமதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு இடையே ஐந்து முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில் சேவைகள் வரும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை செயல்படும். இதன் விவரங்கள் பின்வருமாறு: தாம்பரம் - மானாமதுரை இடையிலான ரயில்கள்: ரயில் எண் 06161: நவம்பர் 6 மாலை 5:30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் (நவம்பர் 7) அதிகாலை 3:45…