Indian Express Tamil
சைவ, வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சை கருத்து: வழக்கை வாபஸ் பெற்ற பா.ஜ.க கவுன்சிலர்; பொன்முடி விடுவிப்பு
சென்னையில் கடந்த 2025-ஆம் ஆண்டு பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, அவர் தமது அமைச்சர் பதவியிலிருந்து விலக்க நேரிட்டது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு விவகாரம் தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தன் என்பவர் பொன்முடி மீது சட்டப்பூர்வமாக வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், மதரீதியாக வெறுப்பு…