Indian Express Tamil
மின்சார வாரிய ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வுடன் நிலுவைத்தொகை வழங்கும் நாள் அறிவிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance - DA) தற்போதுள்ள 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மின்வாரிய ஊழியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வாவாது கடந்த 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய நான்கு மாதங்…