Indian Express Tamil
செலவைக் குறைக்க புதிய திட்டம்: கூகுளை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட்டிலும் விருப்ப ஓய்வு வாய்ப்பு
கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளை கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விருப்ப ஓய்வு திட்டத்தை ஐந்து நாடுகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. நிறுவனத்தை விட்டு விலக விரும்பும் ஊழியர்களுக்கு சிறப்பு இழப்பீட்டுத் தொகையை வழங்கும் இந்தத் திட்டம், முன்னதாகச் சில பிரிவுகளில் மட்டும் அமலில் இருந்த நிலையில், தற்போது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விருப்ப ஓய்வு வாய்ப்பு கூகுளின் அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தாது. க…