Puthiya Thalaimurai
குளித்தலை| ஓடும் பேருந்தில் பாட்டியின் தாலியைப் பறித்த பெண்.. மடக்கிப்பிடித்த மக்கள்!
குளித்தலை அருகே ஓடும் பேருந்தில் 60 வயது பாட்டியின் தாலியைப் பறித்த பெண், பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா என அடையாளம் காணப்பட்ட அவர், வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பக்காப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரியாயி (60), தனது உறவினர்களுடன் மாயனூர் பகுதியில் வயல் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு…