உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கையில் தனிநபரின் கைத்தொலைபேசியை பரிசோதிக்க காவல்துறைக்கு பூரண அதிகாரம்!

குற்றவியல் விசாரணைகளின் போது சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு இலங்கை பிரஜையின் கைபேசிகளைக் கைப்பற்றுவதற்கும் அவற்றிலுள்ள தரவுகளைப் பரிசோதிப்பதற்கும் காவல்துறையினருக்கு பூரண அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) இதனை தெரிவித்துள்ளார். சாதாரண பிரஜை ஒருவரின் கைபேசியைப் காவல்துறையினர் பரிசோதிக்க முடியுமா என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.