Dinamani, Sports
இறுதியில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது இந்தியா- அரையிறுதியில் தென் கொரியாவை சாய்த்தது
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 8-1 கோல் கணக்கில் தென் கொரியாவை புதன்கிழமை அபார வெற்றி கண்டது. இதன் மூலமாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, அதில் ஜப்பானுடன் வியாழக்கிழமை (நவ. 5) பலப்பரீட்சை நடத்துகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டம், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் செலக்ட், ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையாகிறது. முன்னதாக அரையிறுதியில், இந்தியாவின் கோல் கணக்கை ஷிலானந்த் லக்ரா (4-ஆவது நிமிஷம்…