Indian Express Tamil
வரலாற்றில் தனித்துவத் தலைவர்கள் நிலைத்து நிற்பது எப்படி? தானை தலைமக்கள் பாகம் 16
சுப. உதயகுமாரன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் மன்னார்குடியில் ஒரு நெருங்கிய நண்பரின் மகள் திருமணத்துக்குச் சென்று, முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். அப்போது திடீரென மண்டபத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் அமைச்சர் ஒருவர் திருமண நிகழ்வில் பங்கேற்க வருவதாகச் சொன்னார்கள். சற்று நேரத்தில் அவரும், அவரது துணைவியாரும் வந்து என்னருகே அமர்ந்தார்கள். வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்துக் கொண்டோம். அமைச்சரின் வெள்ளை வெளேர் சட்டை என் மீது படுமளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த என்னிடம் அவர் எதுவுமே பேசவில்லை. எனக்கும் அவரிடம் பேச விடயங்கள் ஏதுமிருக்கவில்லை. அப்போது பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு…