உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“என்னையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க...” - வளர்ப்பு பெற்றோரைப் பார்த்து கதறி அழுத குழந்தை!

வளர்ப்பு தந்தை- தாயிடம் இருந்த பிரிக்கப்பட்ட குழந்தை நடத்திய பாசப் போராட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம், ஜக்டியால் மாவட்டம் கரீம்நகர் பகுதியைச் சேர்ந்த காசரபு ஸ்ரீனிவாஸ் மற்றும் கவிதா தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை, இந்து மத தத்தெடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். ருத்ரா மகேஷ் என்ற பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 3 வயது ஆகிறது. இந்த சூழலில் ஸ்ரீனிவாஸுடன் சொத்துத் தகராறில் ஈடுபட்டுள்ள அவரது உறவினர்கள், இந்தத் தத்தெடுப்பு சட்டப்படி…