Hindu Tamil Thisai
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த மெட்டா ரூங்ராட் காலமானார்
எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடித்தவர் தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் (83). அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் காட்சியில் இவரது நடனத்தை மறந்துவிட முடியாது. தாய்லாந்து நாட்டின் மூத்த நடிகையான இவர் சுமார் 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஹாலிவுட் நிறுவனங்கள் தயாரித்த படங்களிலும் நடித்துள்ளார். ‘ஆசியாவின் கருப்பு முத்து…