Indian Express Tamil
மொரீஷியஸில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண்... உயிரைக் காப்பாற்ற நள்ளிரவில் இந்தியாவில் இருந்து விரைந்த 13 பேர் மருத்துவக் குழு
எழுதியவர்: திவ்யா ஏ மொரீஷியஸில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 27 வயது பெண்ணின் உயிரைக் காப்பாற்ற இந்தியாவில் இருந்து 13 பேர் கொண்ட மருத்துவக் குழு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய இந்த மருத்துவப் பணியில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளூர் மருத்துவக் குழுவினருடன் இணைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். மொரீஷியஸின் தலைநகர் போர்ட் லூயிஸின் தெற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில், கடந்த அக்டோபர் 9-ம் தேதி எலோடி தாமஸ் (27) என்ற பெண் வேலை முடிந்து வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காவல்துறை அதிகாரி ஒருவர் நடத்திய…