Polimer News
தீபாவளி பண்டிகையையொட்டி சந்தைகளில் களைகட்டிய ஆடு விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அடுத்த தோணுகால் கிராமத்தில் வியாழக்கிழமை வார ஆட்டுச்சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். ஆடுகளின் எடை மற்றும் தரத்தைப் பொறுத்து ஒரு ஆடு 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.10 கிலோ எடையுள்ள வெள்ளாடு 10,000 ரூபாய் வரையிலும், செம்மறி ஆடு 9,000 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு கிலோ நாட்டுக்கோழி 450 முதல் 500 ரூபாய் வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு…