உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கர்நாடகாவில் பேருந்து கட்டணம் 23% உயர்வு: பெங்களூருவில் 35% வரை அதிகரிக்க அரசு அதிரடி முடிவு

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நான்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் இயக்கும் பேருந்துகளின் கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டணங்கள் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. போக்குவரத்துத் துறையின் அறிவிப்பின்படி, கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கே.எஸ்.ஆர்.டி.சி) பேருந்து கட்டணம் சராசரியாக 23 சதவீதமும், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (பி.எம்.டி.சி) பேருந்து கட்டணம் 33 முதல் 35 சதவீதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல் குமார் திவாரி தலைமையிலான பொதுப் போக்குவரத்து கட்டண ஒழுங்குமுறைக் குழு (பி.டி.எஃ…