Indian Express Tamil
அன்பில் மகேஷ் கைது சரி; நோபல் பிரிக்ஸ்- உதயநிதி அறக்கட்டளை தொடர்பு பற்றியும் விஜய் அரசு விசாரிக்க வேண்டும்: அண்ணாமலை
நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து த.வெ.க அரசு விசாரிக்க வேண்டும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலித்த வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வ…