Puthiya Thalaimurai
1979 சம்பவம்.. ட்ரம்பின் தோல்வி.. இரட்டைக் கொண்டாட்டத்தில் ஈரான்!
செய்தியாளர் - M. மீரா அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் குடியரசுக் கட்சி இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இதனை ஈரான் தனது வெற்றியாக கொண்டாடி வருகிறது. அந்நாட்டின் தெஹ்ரான் வீதிகளில் அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்களின் உருவங்களைக் கொண்ட பிரம்மாண்ட பேனர்களை எரித்தும், அவர்களின் உருவப் பொம்மைகளைச் சங்கிலியால் கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றும் எதிர்ப்பை வெளிப்படுத்தி கொண்டாடி…