உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் அமைச்சர் வினோத் ஆய்வு..!

கும்பகோணம் அருகே திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறை அமைச்சர் வினோத், ஒரு நெல்மணி கூட நனையக் கூடாது என அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு எச்சரித்தார். பட்டீஸ்வரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் கொட்டும் மழையில் ஆய்வு செய்த அவர், சில இடங்களில் தார்பாய்களை சரியாக மூடாமல் இருப்பதாகக் கூறி அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். அலட்சியாமாக இருந்தால் நடவடிக்கை உறுதி எனவும் அவர் எச்சரித்தார்.