Nakkheeran
எட்டுமாத சம்பளம் கட்-அரசு அலுவலக வாசலில் யாசகம் கேட்டு அமர்ந்த பெண் அதிகாரி
அரசுப் பணியில் அமர்ந்து மக்கள் சேவை செய்யும் உயர்மட்ட அதிகாரி ஒருவர், தனது சொந்தச் சம்பளத்திற்காகக் கையில் பாத்திரம் ஏந்திப் போராடும் அவல நிலை பீகார் மாநிலத்தில் அரங்கேறி ஒட்டுமொத்தமாநிலத்தையும் உலுக்கியுள்ளது. பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள பிரஹம்பூர் பிளாக் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வரும் அல்பியா சிங் என்ற பெண் அதிகாரிதான் இந்த வினோத போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். கடந்த பதினோரு மாதங்களாக அத்துறையில் கடமையாற்றி வரும் இவருக்கு, தொடக்கத்தில் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே முறையான அரசாங்கச் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் கடந்த எட்டு…