உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’தீபாவளி பரிசால் இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்’; நிறுவனத்தின் மறக்கமுடியாத நெகிழ்ச்சியான தருணம்

பிரபல நிதி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அளித்த தீபாவளி பரிசு, சமூக ஊடகங்களில் வைரலாகி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. டெல்லியின் ரோகிணி பகுதியில் இயங்கி வருகிறது பிரபல நிதி நிறுவனமான ’பைனான்சர்சாப்’. இந்த நிதி நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு அளித்துள்ள பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் இருக்கைக்கு முன்பு ரிப்பன் கட்டப்பட்ட ஒரு பரிசுப் பெட்டி இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பின்பு, அந்த பெட்டியைத் திறந்து பார்த்ததும் அவர்கள் இன்ப…