உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”தனக்குத்தானே இறுதிச் சடங்கு”; ஏ.ஐ மூலமாக நீதிமன்றத்தையே ஏமாற்றிய பலே கில்லாடி

வழக்கிலிருந்து தப்பிக்கச் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மூலம் தனக்குத்தானே இறுதிச் சடங்கு நடத்தி மரண நாடகம் ஆடிய நபர் காவல்துறையிடம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மவு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் சிங். இவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்ஷிபுரா ரயில்வே தண்டவாளம் அருகே மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த குற்றவாளி ராஜ்குமார் ராஜ்பர் (38) மற்றும் அவரது நண்பர் சுதர்சன் ராஜ்பர் ஆகியோரை காவல்துறையினர் செய்து கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் ராஜ்பர், நீதிமன்ற விசாரணையில…