Daily Thanthi
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கிகள் பஞ்சாபில் பறிமுதல் - 16 பேர் கைது
சண்டிகர், பஞ்சாப் மாநிலம் கோட் கல்சா பகுதியில், ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமிர்தசரஸ் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஏராளமான ஆயுதங்களும், போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நவீன துப்பாக்கிகள் இதில் குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட யூ.இசட்.ஐ. 9 மி.மீ. நவீன இயந்திர துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும்…