Nakkheeran
ஆட்டம் காட்டிய எஸ்.ஐ; சுத்துபோட்ட அதிகாரிகள்
லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்த காவல் துணை ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டம், மஹீல்பலி காவல்நிலையத்தில் பணியாற்றி வருபவர் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சுஜித் குமார். இவர், ஒரு குறிப்பிட்ட வழக்கை சுமூகமாக தீர்த்து வைக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பான புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சுஜித் குமாரை பிடிப்பதற்காக சென்றனர். சம்பந்தப்பட்ட நபரின் அறிவுறுத்தலின்படி, சுஜ…