Nakkheeran
முதல்வர் விஜய்யின் புதுக்கோட்டை பயணம் : கடுமையாக விமர்சித்து ரகுபதி பரபரப்பு பேட்டி!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று (05.11.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “02.11.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். புதுக்கோட்டை மாவட்ட மக்களெல்லாம் ஏதேனும் பெரிய புதிய திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு அறிவிக்கப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால், ஜோசியர் அவரிசம் நேரம் சரியில்லை என்று சொன்னதனால், பெரிய பந்தல் அமைத்து பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இடத்தையெல்லாம் விட்டுவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள…