Daily Thanthi
ஷேன் நிகமின் புதிய திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் துவக்கம்
ஷாம் சூர்யா இயக்கத்தில் ஷேன் நிகம் நடிக்கும் புதிய திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. மலையாள நடிகர் ஷேன் நிகம் , தமிழில் ‘மெட்ராஸ்காரன்’ ‘பல்டி’ படங்களில் நடித்துள்ளார். பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். ஷேன் நிகம் மீண்டும் தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். ட்ரூ ஸ்டோரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷாம் சூர்யா இயக்குகிறார். சத்யராஜ், ஜான் கொக்கன், ஃபர்ஹான் ஃபாசில்…