Nakkheeran
1 மாதம் முழுவதும் கொண்டாட்டம் - ரஜினியின் 76வது பிறந்தநாளுக்கு ராகவா லாரன்ஸ் புது முன்னெடுப்பு
திரைத்துறையில் 51 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வருகிறார் ரஜினிகாந்த். கடைசியாக அவர் நடித்த ஜெயிலர் 2 படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் அவர் தனது 76வது வயதில் காலெடி எடுத்து வைக்கிறார். இதையொட்டி அவரது தீவிர ரசிகரான திரை கலைஞர் ராகவா லாரன்ஸ் புது முன்னெடுப்பை எடுத்துள்ளார். அதாவது ஒரு மாத காலமாக ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை - ஒரு மாதம் நீடிக்கும் 'தலைவர்' பிறந்தநாள் கொண்டாட்டங்கள். தலைவரின் தீவிர ரசிகனாக, அவர் தனது 75-வது வயதில் ஒரு பிரம்மாண்டம…