Nakkheeran
கட்டுமானப் பணியின்போது வி*பத்து : 3 தொழிலாளர்கள் உயிரி*ழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாம் சிப்காட் பகுதியில் புதிதாகத் தொழிற்சாலை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் இன்று மேல்தளம் அமைப்பதற்காக கான்கிரீட் தொழிலாளர்கள் 11 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டிடத்தின் மேல் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக…