Indian Express Tamil
டாடா டிரஸ்ட் அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கம்; வேணு சீனிவாசன் வாக்கை எதிர்த்து மெஹ்லி மிஸ்ட்ரி மனு
George Mathew டாடா அறக்கட்டளைகளின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பான மோதல் தொடர்கிறது. முன்னாள் அறங்காவலரான மெஹ்லி மிஸ்ட்ரி, துணை அறக்கட்டளை ஆணையரிடம் விரிவான மறுப்புரைகளைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளையிலிருந்து (SDTT) தான் நீக்கப்பட்டதை எதிர்த்தும், தனது மறுநியமனத்தின் மீது தொழிலதிபர் வேணு சீனிவாசன் அளித்த வாக்கின் செல்லுபடியாகும் தன்மையைக் கேள்விக்குட்படுத்தியும் மெஹ்லி மிஸ்ட்ரி சவால் விடுத்துள்ளார். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் தனது சமீபத்திய மனுக்களில், அறங்காவலராக வேணு சீனிவாசனின் பதவிக்காலம் முடிவடைந்து இருந்தபோதிலும், அவரது மறுந…