Indian Express Tamil
அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்; வெளிநாடு பல்கலை.களில் படிக்க ரூ.36 லட்சம் ஸ்காலர்ஷிப்
தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுநிகலை பட்டப்படிப்பு பயில, நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டபபடிப்பு பயில நிதியுதவி வழங்கும் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் நடப்ப…