Indian Express Tamil
சமூக ஊடக நிறுவனங்களின் சட்டப் பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய அரசு யோசனை: இணையதளங்களில் பெரும் மாற்றம் வர வாய்ப்பு
எழுதியவர்: சௌமியேந்திர பாரிக் பயனாளர்கள் பதிவிடும் கருத்துகளுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கு வழங்கி வரும் சட்டப்பூர்வப் பாதுகாப்பை ரத்து செய்வது உள்ளிட்ட, இந்தியாவின் சமூக ஊடக ஒழுங்குமுறை கட்டமைப்பில் மிக பெரிய மாற்றங்களைச் செய்வதற்கான ஆலோசனைகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திற்குத் தெரியவந்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: இந்தியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் செயல்படும் விதத்தையே மாற்றியமைக்கக்கூடிய இந்த நடவடிக்கை, அரசாங்கத்திற்கும் தொழில்நுட்பத் துறைக்கும் இடையே ஒரு மிகப்பெரிய மோதலை உருவ…