Indian Express Tamil
மீண்டும் வலுவடைகிறதா வங்கக்கடல்? 13-ஆம் தேதி உருவாகிறது புதிய தாழ்வு பகுதி
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ந்து வருகிறது. இந்நிலையில், அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் வரும் 13-ஆம் தேதி வாக்கில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை…