உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அம்மன் கோவிலில் உண்டியல், தாலி, பித்தளைப் பொருட்கள் திருட்டு..!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கோவிலில் திருடுவதை சாமி பார்க்க கூடாது என்பதற்காக அம்மன் சிலையின் கண்களை துணியால் இருக்க கட்டிவிட்டு தாலி, உண்டியல் மற்றும் பித்தளை பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்கள் பிடிபட்டனர். இறையூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 24ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பெண்ணாடத்தைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரைக் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.