IBC Tamil
யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு!
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெயதா தலைமையில், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ். மாவட்டத் தலைவராக சிவபாதம் இளங்கோதையும், செயலாளராக கஜேந்திரகுமாரும், பொருளாளராக சத்திய விஜயபாமாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உப தலைவராக விக்னேஸ்வரியும், ...