உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்

ஈழத்தமிழர்களின் கடந்தகாலப் போராட்ட வரலாறு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து அண்மையில் மூத்த பட்டிமன்றப் பேச்சாளர் கம்பவாரிதி ஜெயராஜ் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் சமூகத்திற்குள் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அவரது இந்த சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தாயகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார, அரசியல் சவால்களைச் சுட்டிக்காட்டியும் ஊடகப் பரப்பில் விரிவான திறந்த மடல் ஒன்று வெளியாகியுள்ளது.