Indian Express Tamil
Nayanthara Mookuthi amman 2 Review Updates: அம்மனாக வாழ்ந்த நயன்தாரா; துவம்சம் செய்திருக்கும் சுந்தர் சி - புகழ்ந்த நெட்டிசன்கள்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடந்து படத்தின் 2-+ம் பாகம் உருவாக்கும் பணியில், வேல்ஸ் நிறுவனம் ஈடுபட்டது. முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய நிலையில், 2-ம் பாகத்தை இயக்க சுந்தர்.சி கமிட் ஆனார். வழக்கம்போல் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள இந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் வில்லன் கே…