உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“ரூ.50,000 கோடி ஊழல்...!” - முதல்வர் விஜய்யை எச்சரித்த பா.ம.க அன்புமணி!

சென்னையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (05-11-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத் திட்டத்தில் ஊழல் நடைபெறுகிறது. 65 நீர்நிலைகள், குளங்கள், கன்மாய்கள், ஏரிகள் எல்லாமே பள்ளிக்கரணை வடிகாலில் தான் பயன்படுகிறது. அங்கே இருக்கிற தண்ணீர் தான் பள்ளிக்கரணைக்கு வருகிறது. வேடந்தாங்களில் வருகின்ற பறவைகளை விட 4 மடங்கு அதிக பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருகிறது. இது போன்ற சதுப்பு நில இந்தியாவில் எந்த நகரத்துக்கும் கிடையாது. இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கடந்த திமுக ஆட்சியில் சூழ்ச…