Hindu Tamil Thisai
பங்குச் சந்தையில் தீபாவளி சரவெடி: ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி லாபம்
மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் மாபெரும் ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் ஒரே நாளில் 2,008 புள்ளிகள் அதிகரித்ததுடன் முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டியே கிடைத்த தீபாவளி பரிசாக ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு லாபம் கிடைத்தது. இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் தொடக்கம் முதலே களைகட்டியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 2,008 புள்ளிகளுக்கு மேல் (2.60%) உயர்ந்து 79,310…