IBC Tamil
நாட்டுக்குள் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘நிழல் அரசு’ - எச்சரிக்கும் ஜனாதிபதி அநுர
இலங்கைக்குள் சக்திவாய்ந்த ‘நிழல் அரசு’ ஒன்று உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தக் குற்ற வலையமைப்பைத் தோற்கடிக்கா விட்டால் நாட்டின் இளைய தலைமுறையினரின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறும் என்றும் அவர் தெரித்துள்ளார். தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அலரி மாளிகையில் நடைபெற்ற மதத் தலைவர்கள் மாநாட்டில் உரை யாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இணையான அதிகாரக் கட்டமைப்பு